ரசிகர்கள் எதிர்பார்த்த 'டோரதி' முதல் 'தி பாரடைஸ்' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ்...!
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.
டோரதி
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையில், கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'டோரதி'. திருநங்கைகள் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.
தி பாரடைஸ்
தெலுங்கு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, மோகன் பாபு, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, ராகவ் ஜூயல், சம்பூர்ணேஷ் பாபு, ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் 'தி பாரடைஸ்'. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் இன்று நெட்பிளிக்ஸில் தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது.
நா வைப் மிஸ்ஸிங்
தெலுங்கு இயக்குநர் ஸ்வாதி பிரகாஷ் மந்திரிபிரகதா இயக்கத்தில் வருண் சந்தேஷ், ஸ்வேதா பாசு பிரசாத், பிரவீன், ஜபர்தஸ்த் சத்ய ஸ்ரீ ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் 'நா வைப் மிஸ்ஸிங்'. இந்த தொடர் இன்று ஆஹா தளத்தில் வெளியாகி உள்ளது.
தூமகேது
மலையாள இயக்குநர் சுதி மேடிசன் இயக்கதில் சஜின் கோபு, நிகிலா விமல், ஷைம் டாம் சாக்கோ, கணபதி எஸ் பொதுவல், சித்தார்த் பரதன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'தூமகேது'. இந்த படம் நாளை நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது.
அய்யானா மானே சீசன் 2
கன்னட இயக்குநர் ரமேஷ் இந்திரா இயக்கத்தில் குஷி ரவி, அக்ஷய் நாயக், மான்சி சுதிர், ரமேஷ் இந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ள வெப் தொடர் 'அய்யானா மானே-2' இந்த தொடர் ஜீ5யில் நாளை வெளியாக உள்ளது. இதன் முதல் சீசன் 2025ம் ஆண்டு வெளியானது.
சட்டமும் நீதியும் 2
இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் சரவணன் , வரலட்சுமி சரத்குமார், லாவண்யா, பிரேம் குமார் உள்ளிடோர் நடித்துள்ள வெப் தொடர் 'சட்டமும் நீதியும்-2'. இந்த வெப் தொடர் நாளை ஜீ5யில் வெளியாகிறது. இதன் முதல் சீசன் 2025ம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.
வரம்
தெலுங்கு இயக்குநர் ஆதித்ய மண்டலா இயக்கத்தில் விஸ்வதேவ் ரசகொண்டா, ஷிவாத்மிகா ராஜசேகர், ஸ்ரீனிவாச அவசரலா, ஸ்ருதி ஜெயன் உள்ளிட்டோர் நடித்துள்ள வெப் தொடர் 'வரம்'. இந்த வெப் தொடர் இன்று ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.