உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமெரிக்காவில் 54 கோடி வசூலைக் கடந்த 'ஜெயிலர் 2'

அமெரிக்காவில் 54 கோடி வசூலைக் கடந்த 'ஜெயிலர் 2'


தமிழ் சினிமாவின் வியாபார எல்லையில் வெளிநாடுகளில் அமெரிக்கா மார்க்கெட்டும் ஒரு முக்கியமான மார்க்கெட்டாக ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'சிவாஜி' படத்திலிருந்து ஆரம்பமானது. அவர் உருவாக்கிய அந்த வியாபாரம்தான் இன்று பல தென்னிந்தியப் படங்களுக்கும் ஆதாரமாக உள்ளது.

ரஜினிகாந்த் நடித்து வெளிவரும் படங்கள் என்றாலே அவை அமெரிக்காவில் எவ்வளவு வசூலைப் பெறப் போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ரஜினிகாந்த் நடித்து தற்போது வெளியாகி உள்ள 'ஜெயிலர் 2' படம் அங்கு தற்போது வரை 5.8 மில்லியன் வசூலை, இந்திய ரூபாய் மதிப்பில் 54 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக அங்கு படத்தை வெளியிட்டுள்ள வினியோகஸ்தர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்து 2023ல் வெளியான 'ஜெயிலர்' படம், அமெரிக்காவில் 7 மில்லியன் வசூலைப் பெற்று இதுவரையில் வெளிவந்த தமிழ்ப் படங்களில் முதலிடத்தில் உள்ளது. அதன் பின் 'கூலி, பொன்னியின் செல்வன்' ஆகிய படங்கள் உள்ளன. அதற்கடுத்து 'ஜெயிலர் 2' படம் உள்ளது. 'ஜெயிலர்' சாதனையை 'ஜெயிலர் 2' முறியடிக்குமா என்பது இந்த வார இறுதிக்குப் பிறகு தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !