உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏஆர் ரஹ்மான் இசையில் பாடிய தேவிஸ்ரீ பிரசாத், ஜிவி பிரகாஷ், அனிருத்

ஏஆர் ரஹ்மான் இசையில் பாடிய தேவிஸ்ரீ பிரசாத், ஜிவி பிரகாஷ், அனிருத்

நிதேஷ் திவாரி இயக்கத்தில், ஹன்ஸ் ஜிம்மர், ஏஆர் ரஹ்மான் இசையில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராமாயணா'. இப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5ம் தேதி பான் வேர்ல்டு படமாக வெளியாக உள்ளது.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'ராவண தாண்டவம்' என்ற பாடலின் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்கள். ஒவ்வொரு மொழியிலும் முன்னணி இசையமைப்பாளர்களை வைத்து பாட வைத்துள்ளார்கள் ஏஆர் ரஹ்மான் மற்றும் ஹன்ஸ் ஜிம்மர்.

தமிழில் இசையமைப்பாளர்கள் ஜிவி பிரகாஷ், அனிருத், தெலுங்கில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், கன்னடத்தில் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ஹிந்தியில் இசையமைப்பாளர் விஷால் தத்லானி, மலையாளத்தில் யது கிருஷ்ணன் ஆகியோர் இப்பாடலைப் பாடி இருக்கிறார்கள்.

ஆஸ்கர் விருதுகள், கோல்டன் குளோப், கிராமி விருதுகளை வென்றுள்ள ஹாலிவுட்டின் பிரபலமான இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் மற்றும் ஏஆர் ரகுமான் இணைந்து இந்த 'ராமாயாண' படத்திற்கு இசையமைப்பதால் படத்தின் இசை மீதும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !