‛அதிசய பிறவி' : ரஜினி பட தலைப்பில் சந்தானம்
சந்தானம் நடித்து நீண்ட ஆண்டுகளாக ‛சர்வர் சுந்தரம்' படம் கிடப்பில் உள்ளது. இதுதவிர ‛லவ் பைட்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்தப்படியாக இவரின் 20வது படம் உருவாகிறது. இந்த படத்திற்கு ‛அதிசய பிறவி' என பெயரிட்டு, முதல் பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.
இதை அறிமுக இயக்குனர் சுதாமன் கிருஷ்ணா இயக்குகிறார். நாயகியாக கோபிகா ரமேஷ் நடிக்க, ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சந்தானத்தின் முந்தைய படங்களை போன்று இதிலும் காமெடி இருக்கிறது. அதேசமயம் தலைப்பிற்கு ஏற்றபடி கதையும் கொஞ்சம் வித்தியாசமாக பேண்டஸி கலந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1990ல் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ‛அதிசய பிறவி' படம் வந்து வெற்றி பெற்றது. தற்போது அந்த பட தலைப்பை தான் சந்தானத்தின் இந்த படத்திற்கு வைத்துள்ளனர். விரைவில் படம் பற்றிய மற்ற அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாக உள்ளன.