உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஷம்மி கபூர் தமிழில் நடித்த ஒரே படம்

பிளாஷ்பேக்: ஷம்மி கபூர் தமிழில் நடித்த ஒரே படம்


பாலிவுட் சினிமாவின் ஆளுமைகளில் ஒருவராக இருந்தவர் ஷம்மி கபூர். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என இந்தி சினிமாவின் முகங்களில் ஒருவராக இருந்தார். அவர் நடித்த ஒரே தமிழ் படம் 'அமரன்'.

தற்போது வெளிவரும் படங்களில் பெரும்பாலானவை கேங்ஸ்டர் படங்களாகத் தான் இருக்கிறது. 30 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த கேன்ஸ்டர் படம் 'அமரன்'. கார்த்திக், பானுப்ரியா, ராதாரவி, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கே.ராஜேஸ்வர் இயக்கியிருந்தார். இந்தப் படம் தயாரான போது ஹிந்தியில் ஷம்மி கபூர் அதிகமான கேங்ஸ்டர் படங்களில் நடித்து வந்தார். அவரை அணுகி தமிழ் படத்தில் நடிக்க கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டு நடித்தார்.

இந்த படத்தில் அவர் 'டான் மிராண்டா' என்ற கேரக்டரில் நடித்தார். இவரை எதிர்த்து நிற்கும் மற்றொரு இளம் டானாக அமரன் கேரக்டரில் கார்த்திக் நடித்தார். படத்திற்கு ஆதித்யன் இசை அமைத்திருந்தார் பி சி ஸ்ரீராம் ஒளி பதிவு செய்திருந்தார். படம் பெரிய வெற்றி பெற்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதன் இரண்டாம் பாகத்தை கொண்டுவர முயற்சித்தனர். பின்னர் அந்த முயற்சி கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !