உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛இந்தியன் 3' மீண்டும் துவங்குகிறது : மீண்டும் வருகிறார் ‛சேனாபதி' கமல்

‛இந்தியன் 3' மீண்டும் துவங்குகிறது : மீண்டும் வருகிறார் ‛சேனாபதி' கமல்

இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணி முதன்முறையாக 1996ல் வெளியான ‛இந்தியன்' படத்திற்காக இணைந்தனர். சுதந்திர போராட்ட வீரராக சேனாபதி ரோலிலும், லஞ்சத்தை எதிர்த்து போராடும் இந்தியன் தாத்தாவாகவும் கமல் நடித்தார். இந்த படம் எப்படிப்பட்ட வெற்றியை தந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இதே கூட்டணியில் ‛இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகமாக 2024ல் வெளியான படம் ‛இந்தியன் 2'. கடும் விமர்சனங்களை சந்தித்ததோடு படமும் தோல்வியை தழுவியது.

இந்தியன் 2 வெளியான சில மாதங்களில் இந்தியன் 3யை வெளியிடவும், மீதி படப்பிடிப்பை முடிக்கவும் ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் ஷங்கர், தயாரிப்பு நிறுவனமான லைகா இடையேயான பட பட்ஜெட் உள்ளிட்ட விஷயங்களில் ஏற்பட்ட பிரச்னையால் படம் கிடப்பில் போடப்பட்டது. இந்தியன் 2வை விட, இந்தியன் 3யில்தான் பல நல்ல காட்சிகள் உள்ளன. அந்த படம் வெளியானால் ஹிட்டாகும் என படக்குழுவே சொன்னாலும் இரண்டு ஆண்டுகளாக இந்த பிரச்னையில் முடிவு எட்டப்படாமல் இருந்தது.

இப்போது அந்த பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டுள்ளன. ஷங்கர், லைகா மற்றும் கமல் இடையே ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதனால் ‛இந்தியன் 3' பட பணிகளை மீண்டும் துவங்குகின்றன. இதுதொடர்பாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே எடுத்தவரை உள்ள காட்சிகள் தவிர்த்து தேவைப்படுகின்றன முக்கியமான காட்சிகளை மட்டும் எடுத்து சீக்கிரம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

சசிக்குமார் திருப்பூர்
2026-10-08 13:40:04

அந்த இளிச்சவாயன் தயாரிப்பாளர் கண்டிப்பாக