ராமராக வாழ்ந்தவர் இப்போது தசரதராக வருகிறார்
நிதேஷ் திவாரி இயக்கும் 'ராமாயணா' திரைப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதாவாக சாய் பல்லவி, ராவணனாக யஷ், ஹனுமனாக சன்னி தியோல், லட்சுமணனாக ரவி துபேவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக பிரமாண்ட படைப்பாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல்பாகம் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.
இந்நிலையில் மன்னர் தசரதராக அருண் கோவில் இடம்பெறும் புதிய போஸ்டர் வெளியானது. முன்பு இந்திய ரசிகர்களால் ராமராகப் போற்றப்பட்ட அருண் கோவில் தான் தற்போது அயோத்தியின் மன்னரும் ராமரின் தந்தையுமான தசரதராக 'ராமாயணா' திரைப்படத்தில் நடிக்கிறார். இது படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளது.
படக்குழு வெளியிட்ட பதிவில், “ஒரு தலைமுறைக்கே ராமராக இருந்தவர், தற்போது அயோத்தி மன்னர் தசரதராக அருண் கோவில் ராமாயண உலகிற்கு மீண்டும் திரும்புகிறார்” என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த படம் இந்தியா முழுவதும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்தியாவைத் தவிர உலகளாவிய விநியோகத்தை சோனி பிக்சர்ஸ் மேற்கொள்கிறது.