உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிறப்பு நேர்காணல் மூலம் 'ஜெயிலர்-2' படத்தை விளம்பரம் செய்யும் ரஜினி!

சிறப்பு நேர்காணல் மூலம் 'ஜெயிலர்-2' படத்தை விளம்பரம் செய்யும் ரஜினி!


ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படம் அக்டோபர் 15ல் திரையரங்குகளுக்கு வரவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் (அக்.,5) வெளியானது. பொதுவாக, ரஜினிகாந்தின் படங்களுக்கு ஆடியோ வெளியீட்டு விழா மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும்.

இருப்பினும், 'ஜெயிலர் 2' படத்திற்கு அதுபோன்ற பெரிய விழா எதுவும் நடத்தப்பட வில்லை. அதற்குப் பதிலாக, முக்கிய தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் ஒரு சிறப்பு நேர்காணலில் கலந்து கொள்கிறார் ரஜினி. இந்த சிறப்பு நேர்காணல் மூலம் ரஜினி மக்களை எவ்வாறு கவரப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த படத்தில் வித்யா பாலன், சுராஜ் வெஞ்சாரமூடு, மிர்ணா மேனன், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் மோகன்லால், ஹிருத்திக் ரோஷன், சிவராஜ்குமார் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !