உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிரஞ்சீவி படத்தில் இணைந்த அனுராக் காஷ்யப்

சிரஞ்சீவி படத்தில் இணைந்த அனுராக் காஷ்யப்


பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப், தென்னிந்திய படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழில் 'இமைக்கா நொடிகள், மகாராஜா, விடுதலை 2' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், தற்போது 'ஒன் டூ ஒன்' என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் மலையாளத்திலும் ஒரு படத்தில் அறிமுகமாகி நடித்து வருகிறார். இந்த நிலையில், தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் 'காக' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுராக் காஷ்யப் இணைந்துள்ளார்.

இயக்குனர் பாபி கொல்லி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில், அனுராக் காஷ்யப்புக்கு இயக்குனர் பாபி கொல்லி ஒரு காட்சியை விளக்கிக் கூறுவது போன்றும், அதை அவர் உன்னிப்பாக கவனிப்பது போன்றும் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.. இந்தப் படத்தின் கதாநாயகிகளாக அனஸ்வரா ராஜன் மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !