உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆசிய விளையாட்டில் சாதித்த வித்யா ராம்ராஜை பாராட்டிய தனுஷ்

ஆசிய விளையாட்டில் சாதித்த வித்யா ராம்ராஜை பாராட்டிய தனுஷ்

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை வென்ற வித்யா ராம்ராஜை நேரில் அழைத்து பாராட்டினார் நடிகர் தனுஷ்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ், தடகளத்தில் சர்வதேச அளவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று வருகிறார். நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரே தொடரில் 3 பதக்கங்களை வென்று சாதித்தார். அதோடு பி.டி.உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஆசிய விளையாட்டில் சாதனைகள் படைத்த வித்யா ராம்ராஜை தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக முதல்வர் விஜய், அமைச்சர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். நடிகர் தனுஷ் இப்போது வித்யாவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !