உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹிப்ஹாப் ஆதிக்கு முத்தம் கொடுத்த தேவா : ஏன் தெரியுமா?

ஹிப்ஹாப் ஆதிக்கு முத்தம் கொடுத்த தேவா : ஏன் தெரியுமா?

கானா பாடகர்களின் வலியை, புறக்கணிப்பை சொல்லும் படம் மீசைய முறுக்கு 2. இதில் ஹிப்ஹாப் ஆதி கானா பாடகராக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் கானா பாடலுக்கு அடையாளம் கொடுத்தவர் இசையமைப்பாளர் தேவா. அவர் மீசைய முறுக்கு 2 படம் பார்த்துவிட்டு ஆதியை பாராட்டியுள்ளார். முத்தமிட்டு வாழ்த்தி இருக்கிறார்.

இந்த தருணத்தை 'இது போதும் எனக்கு இது போதுமே' என்ற வரிகளைப் பகிர்ந்து தேவாவிற்கு தனது நன்றிகளை ஆதி இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். அந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. மீசைய முறுக்கு 2 படத்தை கானா பாடகர்களுக்கு என தனியாக போட்டு காண்பித்துள்ளார் ஆதி. படம் பார்த்த பலரும் கண் கலங்கி ஆதியை பாராட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !