உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்த தேர்தலில் போட்டியா? காலம் பதில் சொல்லும் என்கிறார் 'லெஜெண்ட்' சரவணன்

அடுத்த தேர்தலில் போட்டியா? காலம் பதில் சொல்லும் என்கிறார் 'லெஜெண்ட்' சரவணன்


தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் சென்னையில் நடந்த தனியார் கல்லூரி விழாவில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது: என்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் மூன்று கேரக்டரில் நடிக்க உள்ளேன். நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. முதல்வர் விஜய் அரசியலுக்கு சென்று விட்டார். அவர் படம் மாதிரி என்னுடைய அந்த படம் இருக்கும். ரஜினியை யார் தான் ரசிக்காமல் இருக்க முடியும். அவர் சினிமாவில் 50 ஆண்டு தொட்டுள்ளார். அவருக்கு நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட வேண்டும்.

என் அப்பா, என் சித்தப்பா ஆகியோர் தொழிலில் ரோல் மாடல். கடுமையாக உழைத்தால் நேர்மையாக இருந்தால் எதிலும் ஜெயிக்கலாம். ரசிகர் மன்றத்தை பலப்படுத்துவது தவறில்லையே. இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்கும் எண்ணமில்லை. அடுத்த தேர்தலில் போட்டியிடலாம், அதற்கு காலம்தான் பதில் சொல்லும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !