உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரசிகர்களை ஈர்த்த ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷின் 'ராமாயணா' புதிய போஸ்டர்கள் !

ரசிகர்களை ஈர்த்த ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷின் 'ராமாயணா' புதிய போஸ்டர்கள் !


ஹிந்தியில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் 'ராமாயணா'. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.

இந்நிலையில் தற்போது ராமாயணா படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்கள் மிகவும் நேர்த்தியாகவும் வித்தியாசமாகவும் அமைந்துள்ளன. காட்டுப் பின்னணியில் தெய்வீகக் களையுடன் தோன்றும் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் ரவி துபே ஆகியோர் பார்ப்போரைக் கவரும் வகையில் உள்ளனர்.

மற்றொரு புறம், ராவணனாக நடிக்கும் யஷ், உடலெங்கும் ஆபரணங்கள் அணிந்து ராஜ கம்பீரமான தோற்றத்தில் பிரமாண்டமாகக் காட்சிளிக்கிறார். நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்திற்கு பிரபல டிஎன்ஈஜி நிறுவனம் விஷூவல் எபெக்ட்ஸ் பணிகளை மேற்கொள்கிறது. இந்த பிரமாண்ட காட்சி விருந்து 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐமேக்ஸ் வடிவத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !