உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜெயிலர் 2' அனிருத் இடமிருந்து மாஸ் பாடலை எதிர்பார்க்கும் ரஜினி ரசிகர்கள்!

'ஜெயிலர் 2' அனிருத் இடமிருந்து மாஸ் பாடலை எதிர்பார்க்கும் ரஜினி ரசிகர்கள்!


ஜெயிலர்-2 படத்திலிருந்து சமீபத்தில் வெளியான, ஒன் சன் ஒன் மூன் பாடல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. சில ரசிகர்கள் இதன் மென்மையான மற்றும் மெல்லிசைத் தன்மையைப் பாராட்டினாலும், பலரும் இது எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

முதல் பாகத்தின்போது பெரும் வரவேற்பைப் பெற்ற, 'ஹூக்கும்' போன்ற பாடல்களின் ஆற்றலும் தாக்கமும் இந்தப் பாடலில் இல்லை என்று ஒரு சாரார் கூறி வருகிறார்கள். நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்குவதால் எதிர்பார்ப்புகள் இயல்பாகவே மிக அதிகமாக உள்ளன. என்றாலும் இதுவரை வெளியான பிரமோஷன்களில், மிதமான வரவேற்பை மட்டுமே பெற்றுள்ளன.

அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் சுவாரஸ்யத்தையும் அதிகரிக்க, படக்குழுவினர் விரைவில் அதிரடியான மாஸ் பாடலையோ அல்லது டிரெய்லரையோ வெளியிட்டு படத்திற்கான எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துங்கள் என்று ரஜினி ரசிகர்கள் அனிருத்திடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !