உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நல்ல விஷயங்கள் நடக்க காலம் தேவை: ஐஸ்வர்யா லட்சுமி

நல்ல விஷயங்கள் நடக்க காலம் தேவை: ஐஸ்வர்யா லட்சுமி


காதல், நட்பு, குடும்பம், லட்சியம் என உறவுகளின் பல்வேறு பரிமாணங்களைப் பேசும் 'லவ்' வெப் சீரிஸ் அக்டோபர் 2ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள லவ் வெப் சீரிஸின் டிரைலர் வெளியானது.

இதில் தாரா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், ''தாராவாக நடித்தது எனக்கு மிகவும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. என்னை 80 சதவீதம் தாராவுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பல நேரங்களில் நான் நடிக்கவே இல்லை, அந்த கதாபாத்திரமாகவே இருந்தேன். நான் நடித்த சில கதாபாத்திரங்களைப் போல தாரா என்னிடமிருந்து வெகு தொலைவில் இருப்பவர் அல்ல. அதனால் அவரை நடிப்பது மிகவும் இயல்பாக இருந்தது.

மேலும், காதல் கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருந்தது. அதற்கு 'லவ்' ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. இதற்கு முன்பு அர்ஜூனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருந்தோம்; அது நடக்காமல் போனதால் வருத்தப்பட்டேன். ஆனால் தற்போது லவ் உருவாகியிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. நல்ல விஷயங்கள் நடக்க சில நேரங்களில் காலம் தேவைப்படும்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !