உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமெரிக்க படத்தில் சந்தோஷ் நாராயணன் பாடல்

அமெரிக்க படத்தில் சந்தோஷ் நாராயணன் பாடல்

நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அமெரிக்க ஆங்கில திரைப்படம் 'பெஸ் ஆப் தி பெஸ்ட்'. லீனா ஹான் இயக்கி உள்ள இந்த படத்தில் ஜொனாதன் எரிச், ஹசன் மின்ஹஜ், ரேயான் ஹெல்ப்பின் நடித்துள்ளனார். டேனியல் ரோஜஸ் இசை அமைத்துள்ளார். மியூசிக்கல் படமான இதில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் ஒரு நடனக் குழுவை பற்றிய கதை.

இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்த ஆல்பம் பாடலான 'என்ஜாய் என்ஞாமி' மற்றும் 'மாமதுர' ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இதனை சந்தோஷ் நாராயணனின் மகள் தீ பாடி உள்ளார்.

இந்த படம் தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. உலகளாவிய ரசிகர்களை சென்றடையும் வகையில் வெளியாகியுள்ள இந்த சர்வதேச திரைப்படத்தில் தமிழ் பாடல்கள் இடம்பெற்றிருப்பது, தமிழ் இசையின் தனித்துவத்தையும் அதன் உலகளாவிய பயணத்தையும் மீண்டும் வெளிப்படுத்தும் முக்கியமான தருணமாக அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !