டோரதி ஒரு மாஸ்டர் பீஸ் படம் : பாராட்டிய தனுஷ்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இன்று(செப்., 25) திரைக்கு வந்துள்ள படம் டோரதி. கீர்த்தி சுரேஷ் முதன்மை வேடத்தில் நடித்துள்ள இப்படம், 2026 டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோதே கவனத்தைப் பெற்றது. இந்நிலையில், டோரதி படம் குறித்து தனுஷ் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அதில், டோரதி கார்த்திக் சுப்பராஜிடமிருந்து வந்த ஒரு மாஸ்டர் பீஸ் படம். துணிச்சலானது மற்றும் நெகிழ்ச்சியானது. எதார்த்தமானது. ஒவ்வொரு நடிகரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். நமது இளையராஜா சாரின் பின்னணி இசை உங்கள் மனதை மயக்கும். இசைஞானியின் ருத்ரதாண்டவம் இது. எனது அருமை நண்பர் கார்த்திக் சுப்பராஜுக்கும், தயாரிப்பு குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தனுஷ் இப்படத்தை பாராட்டியுள்ளதால், ரசிகர்களிடையே இருந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்படத்தை சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.