உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நயன்தாராவை தொடர்ந்து புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்த கயாடு லோஹர்

நயன்தாராவை தொடர்ந்து புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்த கயாடு லோஹர்

நானி, கயாடு லோஹர் நடிப்பில் நேற்று தெலுங்கில் திரைக்கு வந்துள்ள படம் தி பாரடைஸ். இப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் முதல் நாளில் 75 கோடி வசூலித்துள்ளது. ஆனால் இப்படத்தின் மூலம் அதிகம் பேசப்படும் நபர்களில் ஒருவராக கயாடு லோஹர் உருவெடுத்துள்ளார். இப்படத்தில் அவர் ஒரு துணிச்சலான மற்றும் வழக்கத்திற்கு மாறான கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், திரையில் அவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கயாடு இடம்பெறும் பல காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, திரைப்பட ரசிகர்களிடையே விவாதங்களை உருவாக்கியுள்ளன. அவரது கவர்ச்சியான தோற்றம், நானியுடனான கெமிஸ்ட்ரி மற்றும் புகைபிடிக்கும் காட்சிகள் ஆகியவை இளைஞர்கள் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டாக்ஸிக் படத்தில் நயன்தாரா நடித்த புகைப்பிடிக்கும் காட்சியை விட இந்த படத்தில் கயாடு லோஹர் நடித்துள்ள புகைப்பிடிக்கும் காட்சி இளவட்ட ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !