லவ் அண்ட் வார் : ஆலியா பட்டின் முதல்பார்வை வெளியீடு
ஹிந்தியில் சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படமான ‛லவ் அண்ட் வார்' திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் தொடங்கியுள்ளன. சமீபத்தில் ரன்பீர் கபூரின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்ட நிலையில், தற்போது படத்தின் நாயகியான ஆலியா பட்டின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இந்த போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஆலியா பட் இதுவரை கண்டிடாத வகையில், மேடை நாடகக் கலைஞரின் கவர்ச்சியான மற்றும் கம்பீரமான தோற்றத்தில் உள்ளார். அவர் நீண்ட அலைபாயும் கூந்தல், சிகை அலங்காரம், எடுப்பான மேக்கப் மற்றும் பளபளப்பான வேலைப்பாடுகள் கொண்ட கருப்பு நிற ஆடையுடன் காட்சியளிக்கிறார்.
இந்த ஆடை வடிவமைப்பு அவருக்கு ஒரு கவர்ச்சியான, ராஜ கம்பீரமான நாடகக் கலைஞர் தோற்றத்தைத் தருகிறது. மேலும், சிவப்பு மற்றும் தங்க நிற வெளிச்சம் அந்தத் தோற்றத்திற்கு கூடுதல் பிரம்மாண்டத்தை சேர்க்கிறது. லவ் அண்ட் வார் திரைப்படம் 2027 ஜனவரி 21ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி இந்த படத்தை தயாரித்து இயக்குகிறார்.