பணக்கார நடிகர் ஷாருக்கான், நடிகை ஜூஹி சால்வா
பொருளாதார கணக்கீட்டு நிறுவனமான 'ஹுருண் இந்தியா' நிறுவனம் 2026ம் ஆண்டுக்கான பணக்கார நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 10 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் ஷாருக்கான் முதலிடத்தில் உள்ளார். என்றாலும் கடந்த ஆண்டை விட அவரது சொத்தின் மதிப்பு 2,500 கோடி குறைந்துள்ளது. அவர் நடத்தி வரும் ரெட் சில்லீஸ் தயாரிப்பு நிறுவனம், நைட் ரைடர்ஸஸ் ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் பங்கு சந்தையில் சரிவை சந்தித்ததால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவருக்கு அடுத்தபடியாக, 4 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் அமிதாப் பச்சன் உள்ளார். 3 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் சல்மான் கான் 3வது இடத்தில் உள்ளார். 2,500 கோடி சொத்து மதிப்புடன் ஹிரித்திக் ரோஷன் அடுத்த இடத்தில் உள்ளார்.
பணக்கார நடிகைகள் பட்டியலில், ஜூஹி சாவ்லா ரூ.7,790 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இவருக்கு சினிமா வருமானத்தை விட வெளிநாட்டு ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பிற தொழிலின் மூலம் அதிக வருமானம் ஈட்டுகிறார்.
ஜஸ்வர்யா ராய் பச்சன் 900 கோடி சொத்து மதிப்புடன் 2வது இடத்திலும் பிரியங்கா சோப்ரா 850 கோடியுடன் 3வது இடத்திலும், அலியாபட் 550 கோடியுடனும், கரீனா 500 கோடியுடனும் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.