'இருமுடி' படக்குழுவினரை நேரில் சென்று வாழ்த்திய சிரஞ்சீவி - ராம்சரண்
ADDED : 15 hours ago
கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலுங்கில் ரவிதேஜா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான 'இருமுடி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சில தோல்விகளுக்குப் பிறகு ஒரு வலுவான வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்த ரவி தேஜாவிற்கு 250 கோடி வசூலித்து மீண்டும் ஒரு திருப்புமுனை படமாக 'இருமுடி' அமைந்துந்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இருவரும் ரவி தேஜா, இயக்குனர் சிவா நிர்வண மற்றும் பட தயாரிப்பாளர் உள்ளிட்ட 'இருமுடி' படக்குழுவினரை நேரில் சந்தித்து அவர்களது இந்த வெற்றிக்குத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன..