உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித் நடிக்கும் 'டேர் டெவில்' 2027 கோடையில் வெளியாக வாய்ப்பு!

அஜித் நடிக்கும் 'டேர் டெவில்' 2027 கோடையில் வெளியாக வாய்ப்பு!


'குட் பேட் அக்லி' படத்திற்குப் பிறகு, நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் தனது 64வது படத்திற்காக கைகோர்த்துள்ளார். இப்படத்தின் தலைப்பு 'டேர் டெவில்' என அதிகாரப்பூர்வமாகப் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, இப்படம் 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த டேர் டெவில் படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 2ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. 2027 கோடை வெளியீட்டை இலக்காகக் கொண்டுள்ளதால், படப்பிடிப்பு மிக விரைவாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மூலம் ஷாலினி அஜித்குமார், பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !