உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மனீஷ் சர்மா இயக்கத்தில் நடிக்கும் சாரா அர்ஜுன்

மனீஷ் சர்மா இயக்கத்தில் நடிக்கும் சாரா அர்ஜுன்

ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் படத்தின் இரண்டு பாகங்களிலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் சாரா அர்ஜுன். அதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும், இந்த ஸ்பை த்ரில்லர் படமே அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன.

இந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் வெளியாகியுள்ள தகவலின்படி, சாரா அர்ஜுன் தனது அடுத்த புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். மனீஷ் சர்மா இயக்கும் அடுத்த படத்தில் அவர் முதன்மை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், இதில் அம்பிரிஷ் வர்மா கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மனீஷ் சர்மா இயக்குகிறார்.

துரந்தர்-2 படத்திற்கு முன்பு யூபோரியா என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்த சாரா அர்ஜுன், பின்னர் ஸ்ரீனிவாச மங்கபுரம் என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சம்பள பிரச்னை காரணமாக அந்த வாய்ப்பு ராஷா தடானிக்கு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !