'ஜோசப்' பட இயக்குனரின் டைரக்சனில் நடிக்கும் அமலா பால்
ADDED : 2 days ago
நடிகை அமலா பால் கடந்த 2024ல் மலையாளத்தில் வெளியான 'ஆடுஜீவிதம்' படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு அவரது நடிப்பில் 'லெவல் கிராஸ்' என்கிற படம் வெளியானது. பின்னர் கடந்த இரண்டு வருடங்களாகப் படங்கள் எதுவும் நடிக்காத நிலையில், தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் அமலா பால்.
மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ஜோசப்' படத்தை இயக்கியவரும், தமிழில் அதே படத்தை 'விசித்திரன்' என்கிற பெயரில் இயக்கியவருமான இயக்குனர் எம். பத்மகுமார் இந்தப் படத்தை இயக்குகிறார். கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் இந்திரன்ஸ், விஜய் பாபு, கோட்டயம் நசீர், பினு பப்பு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.