சந்தீப் கிஷன் திறமை இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை : ஜேசன் சஞ்சய்
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள படம் சிக்மா. அக்டோபர்- 2 ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில், இயக்குநர் ஜேசன் சஞ்சய் நடிகர் சந்தீப் கிஷனை பாராட்டிப் பேசினார்.
அவர் கூறுகையில், சந்தீப் கிஷனை மிகவும் திறமையான நடிகர். ஆனால் தனக்கான தகுந்த அங்கீகாரத்தைப் இன்னும் பெறவில்லை. அவர் இன்னும் பெரிய உயரங்களை எட்டத் தகுதியானவர். திரையுலகில் சந்தீப் கிஷன், சுமார் 15-16 ஆண்டுகளாக சினிமா மீது மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறார். சந்தீப் கிஷனுடன் தனக்கு ஒரு சகோதரப் பிணைப்பு இருப்பதாகவும், தனது திரைப்பட வாழ்க்கையின் முதல் கதாநாயகன் அவர்தான் என்பதால் அவரைத் தான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் என்றும் ஜேசன் தெரிவித்தார்.
சிக்மா படத்தில் பரியா அப்துல்லா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகத் தயாராகி வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.