பூஜையுடன் தொடங்கியது பிரித்விராஜ் - மஞ்சு வாரியரின் 'ஒடியன்' படப்பிடிப்பு
ADDED : 1 days ago
கடந்த இரண்டு வருடங்களில் மலையாளத்தில் மம்முட்டி நடித்த 'பிரம்மயுகம்' மற்றும் பிரணவ் மோகன்லால் நடித்த 'டியஸ்.இரே.' போன்ற வித்தியாசமான ஹாரர் படங்களை இயக்கியவர் ராகுல் சதாசிவன். இவர் அடுத்ததாக அதே பாணியில் உண்மைக்கும் மாயைக்குமான போர் என்கிற கருத்தை மையப்படுத்தி 'ஒடியன்' என்கிற படத்தை இயக்குகிறார். இதில் கதாநாயகனாக பிரித்விராஜும், கதாநாயகியாக மஞ்சு வாரியரும் நடிக்கின்றனர்.
பாலிவுட்டைச் சேர்ந்த கரண் ஜோகரின் தர்மா புரொடக்சன் நிறுவனம் இதை பிரித்விராஜின் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் துவக்க விழா பூஜையும் படப்பிடிப்பும் கொச்சியில் உள்ள அஞ்சுமனா கோவிலில் நடைபெற்றது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பில் பிரித்விராஜ் 10 முதல் 12 நாட்களும், மஞ்சு வாரியர் 15 நாட்களும் கலந்து கொண்டு நடிக்க உள்ளனர்.