ஒரே தொடருக்காக 5 முறை சிறந்த நடிகை விருது பெற்ற ஜீன் ஸ்மார்ட்
அமெரிக்காவில் தயாராகும் திரைப்படங்களுக்காக உருவாக்கப்பட்டது 'ஆஸ்கர் விருது'. அதே போல அமெரிக்காவில் தயாராகும் தொலைக்காட்சி தொடர்களுக்காக உருவானது 'எம்மி அவார்ட்ஸ்'. 78வது பிரைம் டைம் எம்மி விருதுகள் வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பீகாக் தியேட்டரில் நடந்தது. இதில் 'விடோஸ் பே' என்ற தொடர் 14 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.
அதேபோல், நடிகர் மேத்யூ ரைஸ் 'விடோஸ் பே' தொடருக்காகவும் 'தீ பீஸ்ட் மீ' என்ற தொடருக்காகவும் சிறந்த நடிகருக்கான இரண்டு விருதுகளை பெற்று சாதனை படைத்தார்.
'ஹேக்ஸ் 5வது சீசன்' என்ற தொடருக்காக 'சிறந்த நடிகை' விருதை ஜீன் ஸ்மார்ட் வென்றார். இதன் மூலம் ஒரு நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களுக்கும் சிறந்த நடிகை விருது வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றார்.
இதுதவிர ஆர்.ஸ்காட் ஜெம்மில் இயக்கிய 'தி பிட்' சிறந்த நாடகத் தொடருக்கான விருதினை வென்றது. 'தி பிட்' தொடர்ச்சியாக 2வது ஆண்டாகச் சிறந்த நாடகத் தொடருக்கான விருதை வென்றதுள்ளது.