உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குஞ்சம்மா, சண்முகவடிவு, சதாசிவம்: யாரை குறிப்பிடுகிறார் ராஷ்மிகா?

குஞ்சம்மா, சண்முகவடிவு, சதாசிவம்: யாரை குறிப்பிடுகிறார் ராஷ்மிகா?


பிரபல கர்நாடக சங்கீத பாடகி, பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது. சென்னையில் நேற்று நடந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் கிளாப் அடித்து படத்தை தொடங்கி வைத்தார். கவுதம் தின்னனுரி இயக்க, அனிருத் இசையமைக்கிறார். சிரஞ்சீவி மைத்துனர் அல்லு அரவிந்த், லிங்கா பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கின்றன.

இந்த விழாவுக்கு நீல நிற பட்டுப்புடவையில், தலை நிறைய பூ வைத்து ஹோம்லியாக வந்தார் ராஷ்மிகா. நிகழ்ச்சியில் சில வார்த்தைகள் தமிழிலும் பேசினார். அவர் பேசுகையில் ''இவங்க எல்லார் முன்னாடியும் பேசுறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. எனக்கு இப்போ மனசுல ஒரே ஒரு பீலிங்தான் இருக்கு, அது கிராட்டிட்யூட் தான். நீங்க எல்லாரும் வந்து இங்கே எங்க கூட சேர்ந்து அம்மாவோட (எம்.எஸ்.சுப்புலட்சுமி) இந்த ஸ்பெஷல் டேவை செலிபிரேட் பண்றதுக்கு வந்துட்டீங்க.. அம்மா... ஹாப்பி பர்த்டே அம்மா.

இன்னைக்கு நாங்க உங்களை செலிபிரேட் பண்ணப்போறோம் அம்மா. இங்கே நீங்க உட்கார்ந்து பார்க்கிறப்போ, உங்க முகத்துல ஒரு சின்ன புன்னகை வந்தால் சந்தோஷமாக இருக்கும். உங்க குரல் தனிரகம். உங்ககிட்ட தைரியமான ஒரு சக்தி இருக்கு. நான் கடவுள் அருள் பெற்றவளாக, கடவுள் முன்னால் இருப்பதாக உணர்கிறேன். அம்மா, உங்க லைப்ல ஒரு சின்ன பாகமாக இருக்க, என்னை நீங்களே தேர்ந்தெடுத்து இருக்கீங்க. இதுக்காக நான் எப்பவுமே நன்றிவுடையவளாக இருப்பேன். உங்க ஆசீர்வாதம், சதாசிவம் சார் ஆசீர்வாதம், சண்முகவடிவு அம்மா ஆசீர்வாதம், உங்க குடும்ப ஆசீர்வாதம் என்கிட்டே இருக்கட்டும். இந்த படத்துல என்னோட பெஸ்ட்டை கண்டிப்பா கொடுப்பேன், சத்தியமாக.. ஹாப்பி பர்த்டே அம்மா! தேங்க்யூ அம்மா, தேங்க்யூ குஞ்சம்மா'' என்றார்.

சின்ன வயதில் எம்.எஸ்.சுப்புலட்சுமியை அவர் குடும்பத்தினர் குஞ்சம்மாள் என அழைத்தனர். ராஷ்மிகா குறிப்பிட்ட சண்முகவடிவு என்பது வீணை கலைஞரான எம்.எஸ்.சுப்புலட்சுமி தாயார் பெயர், சதாசிவம் என்பது அவர் கணவர் பெயர். தமிழகத்தில் விழா நடப்பதால் இப்படி தயார் செய்து வந்து தமிழில் பேசினார் ராஷ்மிகா. இடையிடையே ரசிகர்கள் கத்த, இரு... இருடா, போங்கடா , இரண்டு வார்த்தை ட்ரை பண்ணுறேன். இருடா என அவர் தமிழில் செல்லமாக திட்டினார்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஆனாலும் அவர் வரவில்லை. அவர் சார்பில் அவர் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். புரந்தரதாசரின் பாக்யாத லக்ஷ்மி பாரம்மாநம்மம்மா நீ சவுபாக்யாத லக்ஷ்மி பாரம்மா என்ற பாடல் வரிகள் ஒலிக்க, ராஷ்மிகா மேடை ஏறினார். அந்த பாடலுக்கு அபிநயம் பிடிக்க, கமல்ஹாசன் கிளாப் போர்டு அடித்தார். நடிகர் சமுத்திரகனி ஆக்ஷன் என சொன்னார். அவரும் படத்தில் இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !