உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2083 புது வருடத்தை நேபாளத்தில் உற்சாகமாக கொண்டாடிய மனிஷா கொய்ராலா

2083 புது வருடத்தை நேபாளத்தில் உற்சாகமாக கொண்டாடிய மனிஷா கொய்ராலா


நேற்று தமிழகமெங்கும் தமிழ் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இன்று கேரளாவில் சித்திரை விஷு கொண்டாட்டம் நடைபெறுகிறது. அதேபோல நேபாளத்திலும் நேற்று புத்தாண்டு கொண்டாடப்பட்டது. ஆச்சரியமாக அங்கே நேற்று 2083ம் வருடம் பைசக் மாதம் ஒன்றாம் தேதி துவங்கியுள்ளது. நேபாளத்தில் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோருடன் கலந்து கொண்டு கொண்டாடி மகிழ்ந்துள்ளார் நடிகை மனிஷா கொய்ராலா.

இது குறித்து அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் யார் யாரை வியந்து பார்க்கிறேனோ அவர்களுடன் எல்லாம் சேர்ந்து இந்த 2083 புத்தாண்டை கொண்டாடுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் மனிஷா கொய்ராலா, பாலிவுட்டில் பிரபலமானவர் என்றாலும் கூட அவர் நேபாளத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !