தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலித்த 'சீன்'
மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில், சூர்யா, நஸ்ரியா நசிம் மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ல் வெளியான படம் 'சீன்'. சில நாட்களுக்கு முன்பு இப்படம் உலக அளவில் 260 கோடி வசூலைக் கடந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். தற்போது தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக வினியோக நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய படங்கள் நேற்று வெளியாகியுள்ள நிலையிலும் தமிழகம் முழுவதும் 225 தியேட்டர்களில் மூன்றாவது வாரத்தில் ஓடிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த 2026ம் ஆண்டில் சூர்யா நடிப்பில் வெளிவந்த 'கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ், சீன்' ஆகிய மூன்று படங்களுமே பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதில் 'கருப்பு' மற்றும் 'சீன்' ஆகிய இரண்டு படங்கள் தமிழகத்தில் 100 கோடி வசூலைக் கடந்துள்ளன.
2026ம் வருடத்தில் தமிழகத்தில் 100 கோடி வசூலைக் கடந்த படமாக ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் 2' படமும் இருக்கிறது. மொத்தத்தில் 3 படங்கள் இந்த சாதனையைப் புரிந்துள்ளன.