உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அவஞ்சர்ஸ் - டூம்ஸ்டே : அடுத்த மாதப் படத்திற்கு இப்போதே ஹவுஸ்புல் புக்கிங்

அவஞ்சர்ஸ் - டூம்ஸ்டே : அடுத்த மாதப் படத்திற்கு இப்போதே ஹவுஸ்புல் புக்கிங்

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ இணைந்து இயக்க, ராபர்ட் டவுனி ஜுனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் (தோர்), கிறிஸ் எவன்ஸ், அந்தோணி மேக்கி (கேப்டன் அமெரிக்கா), பெட்ரோ பாஸ்கல், பால் ரூட், செபாஸ்டியன் ஸ்டான், புளோரன்ஸ் பக், வனேசா கிர்பி, சிமு லியு, டாம் ஹிடில்ஸ்டன், இயான் மெக்கெல்லன், பேட்ரிக் ஸ்டீவர்ட், ஜேம்ஸ் மார்ஸ்டன், சானிங் டாட்டம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படம் 'அவஞ்சர்ஸ் டூம்ஸ்டே'.

டிசம்பர் 18ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படத்திற்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன்பே ஆரம்பமாகிவிட்டது. இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் இதற்கான முன்பதிவு படம் வெளியாக உள்ள நாளிலிருந்து அதற்கடுத்த சில நாட்களுக்கு இப்போதே ஹவுஸ்புல் ஆக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. 'அவஞ்சர்ஸ்' ரசிகர்கள் இப்படத்தை எந்த அளவுக்கு எதிர்பார்க்கின்றனர் என்பது இதன் மூலம் புரிய வந்துள்ளது.

2012ல் வெளிவந்த 'தி அவஞ்சர்ஸ்', 2015ல் வெளிவந்த 'அவஞ்சர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான்', 2018ல் வெளிவந்த 'அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்', 2019ல் வெளிவந்த 'அவஞ்சர்ஸ் என்ட்கேம்' ஆகிய படங்களுக்கு அடுத்து 'அவஞ்சர்ஸ்' பட வரிசையில் இந்த 'அவஞ்சர்ஸ் டூம்ஸ்டே' வெளியாக உள்ளது.

இதற்கடுத்து, 2027 டிசம்பர் 17ல், 'அவஞ்சர்ஸ் சீக்ரெட் வார்ஸ்' வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !