உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏமாற்றியதாக பெண் புகார் : பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்கு பதிவு

ஏமாற்றியதாக பெண் புகார் : பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்கு பதிவு

மேடை பேச்சாளராக இருந்த முத்துக்குமரன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக இளம்பெண் ஒருவர் இவர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதில், முத்துக்குமரன் என்னை அவர் வீட்டுக்கு அழைத்து மதுவை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தார். தன்னிடம் பாலியல் அத்துமீறலும் செய்தார். தன்னுடன் வாழ சம்மதித்தால் தாலி கட்ட வேண்டும், இல்லை என்றால் பத்தாண்டு சிறை செல்ல வேண்டும் என பாதிக்கப்பட்ட இளம்பெண் புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகார் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

பெண் அளித்த புகாரின் பேரில் முத்துக்குமரன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !