உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷிற்கு ஜோடியாகும் இளம் நடிகை சாரா அர்ஜுன்...?

தனுஷிற்கு ஜோடியாகும் இளம் நடிகை சாரா அர்ஜுன்...?

நடிகர் தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவரது 55வது படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து டான் பிக்சர்ஸ் தயாரிக்க, தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷின் 56வது படம் உருவாகிறது. இதில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என கடந்த சில வாரங்களாக தகவல் வெளியானது. ருக்மணி வசந்த்தும் இந்த படத்தில் நடிக்க ஆர்வமாக தான் உள்ளார். ஆனால், அவர் ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்திற்கு மொத்தமாக கால்ஷீட் தந்துள்ளார். இதனால் இந்த படத்திற்கு கால்ஷீட் ஒதுக்குவதில் இழுபறி நீடிக்கிறதாம்.

ஒருவேளை தனுஷ் 56 படத்தில் ருக்மணி வசந்த் நடிக்க முடியாத சூழ்நிலை அமைந்தால் என்ன செய்வது என்பதற்காக படக்குழு வேறு நாயகியையும் நடிக்க வைக்க திட்டமிட்டு வருகிறது. அந்தவகையில் தமிழில் தெய்வதிருமகள், சைவம் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சமீபத்தில் தூரந்தர் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்த சாரா அர்ஜுன் உடன் தமிழரசன் பச்சமுத்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Mohan, dubai
2026-04-15 16:26:35

தனுஷ் எப்போதும் செலக்ட் செய்வர் ஆனால் அது வெளியே அப்பட்டமா தெரியுது மேலும் அது குடும்பத்தை பாதிக்காம