உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மே மாதத்தை குறி வைக்கும் ‛ஏழு கடல் ஏழு மலை'

மே மாதத்தை குறி வைக்கும் ‛ஏழு கடல் ஏழு மலை'

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ' ஏழு மலை ஏழு கடல்'. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இப்படம் தயாரிப்பில் உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. பல்வேறு நாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களுக்கு இந்த படம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் ரிலீஸில் தாமதம் ஏற்பட்டு வந்தது. அதோடு படத்தின் வியாபாரமும் முழுமை பெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ‛ஏழு மலை ஏழு கடல்' படத்தின் மொத்த தியேட்டர் உரிமையை துபாயை சார்ந்த தொழிலதிபர் தனது கோல்டன் ஸ்பேரோ நிறுவனத்தின் மூலம் கைப்பற்றி வெளியிடுகிறார். படத்தை அடுத்தமாதம் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !