உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஐதராபாத், தெலுங்கு சினிமாவை விட்டு விலகுகிறாரா அனுஷ்கா?

ஐதராபாத், தெலுங்கு சினிமாவை விட்டு விலகுகிறாரா அனுஷ்கா?

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை அனுஷ்கா. தெலுங்கு சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ஆடம்பரக் குடியிருப்பை அவர் வாங்கியிருந்தார். அங்கு தான் அவர் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். இந்தக் குடியிருப்பைத் தவிர, ஹைதராபாத்தில் அவருக்குப் பண்ணை வீடு மற்றும் சில சொத்துகளும் உள்ளன.

இந்நிலையில் அனுஷ்கா தற்போது ஐதராபாத்தை விட்டு விலகி தனது சொந்த ஊரான பெங்களூருவில் நிரந்தரமாகக் குடியேறத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. இதனால் அவரது சொத்துக்களை விற்க இருப்பதாகவும் செய்தி பரவி வருகிறது. அதோடு தெலுங்கு சினிமாவுக்கும் அவர் முழுக்கு போடுவதாகவும் சொல்கிறார்கள். கடந்த சில காலமாகவே பொதுவெளியில் அதிகம் தலைகாட்டாமல் இருக்கும் அவர், புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை.

இதற்கிடையில், அவரது திருமணம் குறித்த வதந்திகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. ஆனால், அனுஷ்காவின் தரப்பினர் இத்தகைய செய்திகளைத் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். ஐதராபாத்தில் உள்ள அவரது சொத்து விற்பனை குறித்த இந்தப் புதிய தகவல், அவரது எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தெலுங்குத் திரையுலகை விட்டு அவர் விலக எண்ணுவதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !