உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அனிருத்தை வாழ்த்திய அஜித் : ஆச்சர்யப்படும் திரையுலகம்

அனிருத்தை வாழ்த்திய அஜித் : ஆச்சர்யப்படும் திரையுலகம்

பொதுவாக நடிகர் அஜித் எந்த திருமண நிகழ்ச்சிக்கும் செல்வதில்லை, தனக்கு நெருக்கமானவர்கள் அழைத்தால் கூட திருமணத்திற்கு சென்று மணமக்களை வாழ்த்துவது இல்லை. இவ்வளவு ஏன் தன்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்களின் இல்ல திருமண விழாவிற்கு, தன்னை வைத்து படம் இயக்கிய இயக்குனர்களின் திருமண விழாவிற்கு, தன்னுடன் பணியாற்றிய நடிகர்கள், டெக்னீஷியன்கள் திருமண விழாவிற்கு கூட செல்வதில்லை. அதேபோல் துக்க வீட்டுக்கும் சென்று அஞ்சலி செலுத்துவதில்லை. பல ஆண்டுகளாக இதை வழக்கமாகப் வைத்திருக்கிறார்.

பாரதிராஜா, பாக்யராஜ், தேவா போன்றவர்கள் மறைந்த போது கூட அஜித் நேரில் இரங்கல் தெரிவிக்க செல்லவில்லை. இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் திருமண வரவேற்பில் மனைவி ஷாலினியோடு சென்று மணமக்களை வாழ்த்தினார். இது ஆச்சர்யத்தையும் அதேசமயம் கோலிவுட்டில் பல கேள்விகளையும் ஏற்படுத்தி உள்ளது.

பணக்காரர்கள் வீட்டு திருமணத்திற்கு மட்டும் அஜித் செல்வாரா? தனக்காக உழைத்த தன்னுடன் நெருக்கமாக இருந்த, தனக்கு சம்பளம் கொடுத்தவர்கள் திருமணத்திற்கு செல்ல மாட்டாரா? என விமர்சனங்கள் வந்துள்ளன.

கடந்த சில வாரங்களாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் டேர் டெவில் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்த அஜித், மணமக்களை வாழ்த்தி இருக்கிறார்.

அஜித் நடித்த ‛வேதாளம்,விவேகம், விடாமுயற்சி' உள்ளிட்ட படங்களுக்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !