அஜித் - ஷாலினியின் கார் பயண வீடியோ வைரல்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் குமார், கார் பந்தயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதோடு, கார் ஓட்டுவதிலும் தனிப் பிரியம் கொண்டவர். சென்னையின் பரபரப்பான சாலைகளில் தானே காரை ஓட்டி செல்வதை அவர் வாடிக்கையாக வைத்திருக்கிறார். அத்தகைய ஒரு இனிமையான தருணத்தை படம் பிடித்து அழகான ரீல்ஸ் வீடியோவை அவரது மனைவி ஷாலினி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் இனிமையான பாடலான ஸ்மியாய் ஹாய் பாடலின் பின்னணியில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இதில், வெள்ளை நிறச் சட்டையில் அஜித் கார் ஓட்ட, அருகில் நீல நிற உடையில் ஷாலினி புன்னகைத்தபடி அமர்ந்திருக்கிறார். அஜித் லவ் யூ என சொல்லும் அழகான தருணமும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
அஜித்தும், ஷாலினியும் பொதுவாகத் தங்களது தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையைப் பொதுவெளியில் அதிகம் வெளிப்படுத்தாமல் ரகசியமாகவே வைத்திருப்பார்கள். இதன் காரணமாக, அவர்களின் அரிய தருணங்கள் இதுபோன்று வெளியாகும்போது, அவை ரசிகர்களுக்குப் சர்ப்ரைஸாக அமைந்துவிடுகின்றன. தற்போது ஷாலினி தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் டேர் டெவில் படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.