இரண்டு நாளில் 60 கோடி வசூல் கடந்த 'ஓம்'
ADDED : 10 minutes ago
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சாய் அப்யங்கர் இசையமைப்பில், தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் பலர் நடித்த 'ஓம்' படம் நேற்று முன்தினம் நவம்பர் 20ம் தேதி வெளியானது.
முதல் நாளில் இப்படம் உலக அளவில் 40 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இரண்டு நாட்களில் இப்படம் 60 கோடி வசூலைக் கடந்திருக்கும் என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனுஷ் நாயகனாக நடித்து இதுவரையில் வெளிவந்த படங்களின், முதல் நாள் வசூலில் இப்படம் புதிய சாதனை படைத்துள்ளது என்கிறார்கள். இதற்கு முன்பு தனுஷ் நடித்து 2025ல் வெளிவந்த தெலுங்கு, தமிழ்ப் படமான 'குபேரா' படம் முதல் நாளில் 30 பிளஸ் கோடி வசூலித்ததே அவரது சாதனையாக இருந்தது.
இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் ரசிகர்களிடமிருந்து வந்தாலும் அதிக வசூலைப் பெற்றிருப்பது ஆச்சரியப்படுத்தி உள்ளது.