டைம் 100 நெக்ஸ்ட் இந்தியா பட்டியலில் இடம்பிடித்த நயன்தாரா, சமந்தா, சாய்பல்லவி, அனிருத்
வணிகம், பொழுதுபோக்கு, அறிவியல், விளையாட்டு மற்றும் சமூகப் பணிகள் ஆகிய துறைகளில் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வளர்ந்து வரும் தலைவர்களை அங்கீகரிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள முதலாவது டைம் 100 நெக்ஸ்ட் இந்தியா பட்டியலில் பாலிவுட் சினிமாவை சேர்ந்த நடிகை ஆலியா பட் மற்றும் இயக்குநர்கள் ஆர்யன் கான், பாயல் கபாடியா, தேஜா ரியோ ஆகியோர் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் அடங்கிய இப்பட்டியலை இந்த சர்வதேச இதழ் வெளியிட்டுள்ளது. இதில் ஒரு அட்டைப்படத்தில் ஆலியா பட் தோன்றியுள்ளார். மற்றொரு அட்டைப்படத்தில் ஆர்யன், பாயல் மற்றும் ஆங் படப் புகழ் தேஜா ஆகியோர் இணைந்து இடம்பெற்றுள்ளனர்.
விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர், தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி பவன் குமார் சந்தனா மற்றொரு தனி அட்டைப்படத்தில் இடம் பெற்றுள்ளார். இசைக்கலைஞர்கள் தில்ஜித் தோசன்ஜ் மற்றும் அனிருத் ஆகியோரும் இப்பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
கலைத் துறையைப் பொறுத்தவரை நடிகர்கள் ஜிதேந்திர குமார், சமந்தா, அலி பசல், சாய் பல்லவி, இஷான் கட்டர், நயன்தாரா, வேதாங் ரெய்னா, விக்கி கவுஷல், பார்வதி திருவோத்து மற்றும் ஜஹான் கபூர் உள்ளிட்ட பலர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.