உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பின் முதல்வர் விஜய் ரஜினிகாந்த் சந்திப்பு

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பின் முதல்வர் விஜய் ரஜினிகாந்த் சந்திப்பு

தமிழக முதல்வராக பதவி ஏற்றது முதல் விஜயை கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். லண்டன் கார் ரேஸ் பந்தயத்தில் அஜித் கூட சந்தித்து வாழ்த்தி விட்டார். ஆனால் ரஜினிகாந்த் மட்டும் தவெக ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில் இதுவரை நேரில் சந்திக்கவில்லை. இருவரும் ஒன்றாக இந்த நிகழ்ச்சியிலும் கூட கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் அனிருத் காவியா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் ரஜினிகாந்த் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நேரில் சந்தித்துக் கொண்டனர்.

கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளுக்கு பின் இவர்கள் சந்தித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு லியோ மற்றும் ஜெயலர் படப்பிடிப்பு ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் ஒன்றாக நடந்த போது இருவரும் சந்தித்து பேசி உள்ளனர். பின்னர் இப்பொழுது தான் நேரில் சந்திக்கிறார்கள். மாப்பிள்ளை அனிருத்தின் நெருங்கிய உறவினர் என்பதால் ரஜினிகாந்த் இந்த சந்திப்பை தவிர்க்க வில்லை என்று கூறப்படுகிறது. முதல்வர் விஜய் ரஜினிகாந்த் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் வைரல் ஆகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !