உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தொல்லியல் ஆய்வாளராக நடித்துள்ள மீனாட்சி சவுத்ரி : வருட இறுதியில் வெற்றியை பெறுவாரா?

தொல்லியல் ஆய்வாளராக நடித்துள்ள மீனாட்சி சவுத்ரி : வருட இறுதியில் வெற்றியை பெறுவாரா?

நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழில் விஜய் ஆண்டனி நடித்த 'கொலை' திரைப்படம் மூலம் அறிமுகமானவர். அதேசமயம் தெலுங்கிலும் அவர் ஏற்கனவே பிரபலம். தவிர, கடந்த 2024-ல் விஜய் நடிப்பில் வெளியான 'தி கோட்' மற்றும் துல்கர் சல்மானுடன் நடித்த 'லக்கி பாஸ்கர்' ஆகிய படங்கள் அவருக்கு மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தன. கடந்த வருடம் வெளியான 'சங்கராந்திகி வஸ்துன்னம்' படமும் மீனாட்சிக்கு வெற்றிப் படமாக அமைந்தது.. அதே சமயம் பட வாய்ப்புகள் மட்டும் அவருக்குப் பெரிய அளவில் கைகூடவில்லை. இந்த வருடத்தில் ஜனவரியில் 'அனகனகா ஓக ராஜு' என்கிற படத்தில் நடித்திருந்தார் மீனாட்சி. விமர்சன ரீதியாக இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான 'விருஷகர்மா' திரைப்படத்தில் தொல்லியல் ஆய்வாளர் கதாபாத்திரத்தில் மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கிறார்.. இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இயக்குனர் கார்த்திக் தண்டு இயக்கியுள்ள இப்படத்தில் நாகசைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஆண்டின் இறுதியில் வெளியாகி தனக்கு இன்னொரு வெற்றியைத் தந்து, இந்த ஆண்டைச் சிறப்பான முறையில் நிறைவு செய்ய இந்தப் படம் உதவும் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார் மீனாட்சி சவுத்ரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !