உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓம் ரூ.100 கோடி வசூல் அறிவிப்பு இன்று வருமா ?

ஓம் ரூ.100 கோடி வசூல் அறிவிப்பு இன்று வருமா ?

தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் 'ஓ.ம்'. இப்படத்திற்கு விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பில்லை. இரண்டாம் பாதி பொறுமையை சோதிக்கும்படி உள்ளதாகவே பலரும் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

இருந்தாலும் படத்தின் வசூல் முதல் நாளில் 40 கோடி என்றும், இரண்டாவது நாளுடன் சேர்த்து 75 கோடி என்றும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் நேற்றும் 30 கோடியைக் கடந்திருக்கும் என்று சேர்த்து படம் 100 கோடி வசூலைக் கடந்தது என்ற அறிவிப்பை இன்று வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ், தெலுங்கில் வெளியான 'குபேரா' படத்திற்குப் பிறகு 'ஓ.ம்' படம் 100 கோடியை வசூலிக்க உள்ளது. தனுஷ் தமிழில் மட்டும் நடித்து வெளியான 'இட்லி கடை, கர' ஆகிய படங்கள் தலா 50 கோடி வசூலை மட்டுமே கடந்ததாக சொல்லப்பட்டது. அந்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக தோல்விப் படங்கள்தான்.

விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் இப்படம் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றுவிடும் என்றே பாக்ஸ் ஆபீஸில் தெரிவிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !