துல்கர் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்க ஐடி வேலையை உதறிவிட்டு வந்த சாத்விகா வீரவல்லி
தெலுங்கில் தற்போது துல்கர் சல்மான் உருவாகி வரும் படம் 'ஆகாசமோ ஒக்க தாரா'. இந்த படத்தை பவன் சாதினேனி என்பவர் இயக்குகிறார். கதாநாயகியாக ஒரு பக்கம் ஸ்ருதிஹாசன் நடித்தாலும், இன்னொரு பக்கம் புதுமுக வரவாக அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சாத்விகா வீரவல்லி என்பவர் மற்றொரு கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் இரண்டு பொறியியல் பட்டங்களைப் பெற்றவர். அமெரிக்காவில் பிரபலமான ஆரக்கிள் நிறுவனத்தில் மூத்த ஆலோசகராகவும் திட்ட மேலாளராகவும் பணியாற்றியவர். மென்பொருள் மற்றும் ஹெல்த் கேர் தொழில்நுட்பத் துறையில் நான்கு ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.
இதையெல்லாம் உதறிவிட்டு சினிமாவிற்கு வர வேண்டும் என நினைத்தது சினிமா மீது தான் கொண்ட தீராத ஆர்வத்தினால் தான் என்று கூறியுள்ளார் சாத்விகா வீரவல்லி. சினிமாவிற்காக வேலையை ராஜினாமா செய்தபோது, நான்கு ஆண்டு அனுபவம், இரண்டு பொறியியல் பட்டங்கள் இருந்தும் எல்லாவற்றையும் ஏன் விட்டுவிட்டு செல்கிறேன்? ஒருவேளை என் முடிவு தவறாகப் போனால் என்ன ஆவது? என்று யோசித்தேன். ஆனால் படப்பிடிப்பு தொடங்கியதும் எனது பயம் அனைத்தும் மறைந்துவிட்டது” என்று கூறியுள்ளார் சாத்விகா வீரவல்லி.