உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / "தனித்தனியாக வசிப்பதால் தான் எங்கள் திருமணம் இன்னும் நீடிக்கிறது" ; ரம்யா கிருஷ்ணன்

"தனித்தனியாக வசிப்பதால் தான் எங்கள் திருமணம் இன்னும் நீடிக்கிறது" ; ரம்யா கிருஷ்ணன்


நடிகை ரம்யா கிருஷ்ணன் கடந்த 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர். இப்போதும் கூட முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரம்யா கிருஷ்ணன் ரஜினிக்கு ஜோடியாக நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதே சமயம் சமீப காலமாகவே அவர் தனது கணவர் கிருஷ்ணா வம்சியிடம் இருந்து பிரிந்து வாழ்கிறார் என்றும், இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டார்கள் என்றும் கூட சோசியல் மீடியாவில் சில செய்திகள் வெளியாகின.

இயக்குனர் கிருஷ்ணா வம்சியின் இயக்கத்தில் நடித்த போது அவருடன் காதல் வயப்பட்ட ரம்யா கிருஷ்ணன், 2003ல் அவரை திருமணம் செய்து கொண்டார். 2006ல் அவர்களுக்கு ரித்விக் என்கிற மகன் பிறந்தார். இந்த நிலையில் தான், தானும் கணவரும் பிரிந்துவிட்டோமா என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

இது குறித்து அவர் கூறும்போது, நாங்கள் இருவரும் இப்போதும் கணவன்-மனைவியாகத்தான் இருக்கிறோம். ஆனால், எங்கள் தொழில் காரணமாக, வசதிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் வெவ்வேறு நகரங்களில் வசித்து வருகிறோம். இது நூறு சதவீதம் எங்கள் வேலை சம்பந்தப்பட்ட முடிவு மட்டுமே.. சென்னையில் சீரியலில் நடிப்பதற்காக ஒவ்வொரு முறையும் 15 நாட்கள் கிளம்பி வரும்போது, என் மகன் என்னை விட்டுப் பிரிவதால் உடல்நிலையில் சரியில்லாமல் போய்விடுவான். அதனால் அவனை சென்னையில் பள்ளியில் சேர்த்து அங்கேயே நான் தங்கிவிடுவது என இருவரும் சேர்ந்துதான் முடிவு எடுத்தோம்.

எப்போதும் சண்டை வைத்துக் கொண்டிருப்பதை விட, இப்போது நாங்கள் இருவரும் மிகச் சிறந்த நண்பர்களாக இருக்கிறோம்.. தனித்தனியாக வசிப்பதால் தான் எங்கள் திருமணம் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன் என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

அது மட்டுமல்ல, காதலித்த காலகட்டத்திலேயே, நாம் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்? லிவிங் டுகெதர் முறையில் ஒன்றாக வாழலாமே என்று என்னிடம் கணவர் கேட்டுக்கொண்டே இருந்தார். ஒருவேளை நான் அப்போதே அதற்கு சம்மதித்திருக்கலாமோ என்னவோ என்று இன்னொரு பதிலையும் கூறியுள்ளார் ரம்யா கிருஷ்ணன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !