உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராமாயணா : வெளிநாட்டு வசூல் 50 மில்லியன் டாலர்

ராமாயணா : வெளிநாட்டு வசூல் 50 மில்லியன் டாலர்

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் பலர் நடிப்பில் நவம்பர் 5ல் வெளியான ஹிந்திப் படம் 'ராமாயணா'. இப்படம் வெளிநாடுகளில் 11 நாட்களில் 50 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 468 கோடி ரூபாய். அதனுடன் இந்திய வசூலையும் சேர்த்தால் படம் 1500 கோடியை நெருங்கி வருகிறது.

வெளிநாட்டு வசூலைப் பொறுத்தவரையில் 'தங்கல்' திரைப்படம் அதிகபட்சமாக 230 மில்லியன் டாலர் வசூலுடன் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கடுத்த இடங்களைப் பிடித்துள்ள படங்களின் பட்டியல் கீழே… (இந்த மதிப்பு எல்லாம் அந்த படங்கள் வெளியான காலக்கட்டங்களில் இருந்த ரூபாய் மற்றும் டாலரின் மதிப்பில் கணக்கிடப்பட்டவை)

2. சீக்ரெட் சூப்பர் ஸ்டார் - 125 மில்லியன் டாலர்

3. பஜ்ரங்கி பைஜான் - 75 மில்லியன்

4. டிஸ்கோ டான்சர் - 75 மில்லியன்

5. பாகுபலி 2 - 60 மில்லியன்

6. ஆர்ஆர்ஆர் - 53 மில்லியன்

7. துரந்தர் 2 - 51 மில்லியன்

8வது இடத்தில் தற்போது 'ராமாயணா' உள்ளது. அப்படம் விரைவில் 5 இடங்களுக்குள் செல்லும என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !