உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலிவுட் இயக்குநர் டைரக்சனில் மீண்டும் ஒரு ஹாரர் படத்தில் மாதவன்

பாலிவுட் இயக்குநர் டைரக்சனில் மீண்டும் ஒரு ஹாரர் படத்தில் மாதவன்


நடிகர் மாதவன் தற்போது ஒரு பக்கம் பயோபிக் படங்களிலும் இன்னொரு பக்கம் தேசபக்தி சார்ந்த படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் புதிதாக ஹாரர் படம் ஒன்றில் அவர் நடிக்க இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே '13 பி', 'சைத்தான்' உள்ளிட்ட ஹாரர் படங்களில் நடித்தவர் தான் நடிகர் மாதவன். தற்போது பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு சூப்பர்நேச்சுரல் திகில் ஹாரர் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தை இயக்குபவர் இயக்குநர் விஷால் பூரியா. இவர் ஏற்கனவே லபாச்சபி, சோரி உள்ளிட்ட தொடர்களின் மூலமும் 'மா' போன்ற அழுத்தமான உளவியல் சார்ந்த திகில் படங்களை இயக்கியதன் மூலமும் புகழ்பெற்றவர். இவர் மாதவன் குறித்துப் பேசும்போது, இந்திய சினிமாவில் ஓ.ஜி ஹாரர் ஸ்டார் என்று வர்ணித்துள்ளார். இதுவரை இந்தியத் திரையுலகில் யாரும் பார்த்திராத வகையிலான நடுக்கத்தைத் தரக்கூடிய ஒரு புதிய திகில் அனுபவத்தை ரசிகர்கள் தங்களின் எலும்புகளில் உணரும்படி வழங்குவோம் என்று இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த வருடத் துவக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !