வாரிசு இயக்குநரின் படத்தில் மோகன்லால் ; கொச்சியில் நடைபெற்ற தொடக்க விழா பூஜை
நடிகர் மோகன்லால் தான் தற்போது நடித்து வரும் படங்கள் தவிர்த்து அடுத்தடுத்து நடிக்க இருக்கும் தனது ஏழு படங்கள் குறித்த அறிவிப்பை சமீபத்தில் மொத்தமாக வெளியிட்டார். அதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான சத்யன் அந்திக்காடு மற்றும் அவரது மகன் அகில் சத்யன் ஆகியோர் இயக்கத்தில் தனித்தனியாக படங்களில் நடிக்க இருக்கிறார் என்பதுதான்.. இத்தனைக்கும் கடந்த வருடம் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால் நடித்த 'ஹிருதயபூர்வம்' படம் வெளியானது.. அந்தப்படம் வெற்றியைப் பெறத் தவறியது; இருந்தாலும் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைக் கொடுத்துள்ளார் மோகன்லால்.
இன்னொரு பக்கம் அவரது மகன் அகில் சத்யன், துல்கர் சல்மானை வைத்து கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு 'வரனே அவசியமுண்டு' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார்.. அந்தப் படம் ஓரளவு வெற்றிப் படமாக அமைந்தாலும் கூட கிட்டத்தட்ட அடுத்த படம் கிடைப்பதற்கு அவருக்கு ஆறு வருட இடைவெளி ஏற்பட்டது.. தற்போது அவரது இரண்டாவது படமாக தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை மோகன்லால் அவருக்கு அளித்துள்ளார்.
இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா பூஜை கொச்சியில் நடைபெற்றது.. இப்படம் ஒரு எமோஷனல் மற்றும் நகைச்சுவை கலந்த ஆக்ஷன் த்ரில்லர் வகையைச் சேர்ந்ததாக இருக்கும் என்று இயக்குனர் அகில் சத்யனும் கூறியுள்ளார். குறிப்பாக இது தனது தந்தையின் பட பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.