பிளாஷ்பேக்: திடீர் நடிகரான திருநாவுக்கரசர்
ADDED : 2 days ago
எம்ஜிஆரின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் அரசியல்வாதி திருநாவுக்கரசர். அறந்தாங்கி தொகுதியின் தொடர் உறுப்பினராகவும், எம்ஜிஆர் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராகவும் இருந்தார். பின்னர் காங்கிரசில் இணைந்தார்.
திருநாவுக்கரசர் அரசியலில் தீவிரமாக இருந்தபோது 'அக்னி பார்வை' என்ற படத்தில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடித்தார். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்தார். அடாவடி செய்யும் அரசியல்வாதியான நிழல்கள் ரவியின் கொட்டத்தை அடக்க அவரது ஊருக்கே மாறுதலாகி வந்து அவரை எதிர்த்து நிற்பதுதான் படத்தின் கதை.
திருநாவுக்கரசர் ஜோடியாக சரண்யா நடித்தார். இவர்களுடன் ராம்குமார், அஞ்சு, கே.ஆர்.விஜயா, ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், டிஸ்கோ சாந்தி உள்ளிட்ட பலர் நடித்தான். மாதவன் இயக்கினார். இளையராஜா இசை அமைத்தார். படம் வெற்றி பெறவில்லை, அதன் பிறகு திருநாவுக்கரசர் நடிக்கவும் இல்லை.