உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : கைவிடப்பட்ட கணவர் படத்தை மீண்டும் தயாரித்த பூர்ணிமா

பிளாஷ்பேக் : கைவிடப்பட்ட கணவர் படத்தை மீண்டும் தயாரித்த பூர்ணிமா

கே பாக்யராஜ், ரூபிணி நடிக்க, சார் ஐ லவ் யூ' என்ற படம் தொடங்கப்பட்டது. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் இந்த படம் என்ன காரணத்தாலோ கைவிடப்பட்டது. பள்ளி ஆசிரியர் ஒருவரை அதே பள்ளியில் படிக்கும் மாணவி காதலிப்பதும், மாணவியின் காதல் ஏற்க மறுத்த ஆசிரியர் உடனடியாக ஒருவரை திருமணம் செய்து கொள்வதும் அந்த திருமணத்திற்கு பிறகும் அந்த மாணவி அவருக்கு தரும் தொல்லைகளும் அதை அவர் சமாளிக்கும் இடமும் காமெடியாக சொல்லப்பட்ட திரைக்கதையை கொண்ட படம்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை 'சுந்தரகாண்டம்' என்ற பெயரில் கே. பாக்யராஜின் மனைவி பூர்ணிமா தன் மகள் பெயரில் சரண்யா கிரியேஷன் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தயாரித்தார்.

இதில் ஆசிரியராக கேட்டு பாக்கியராஜும், மாணவியாக சிந்துஜாவும், ஆசிரியரின் மனைவியாக பானுப்பிரியாவும் நடித்தனர். படம் நூறு நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.

தீபக் என்ற புதுமுகம் இசையமைத்திருந்தார். சிறந்த கதை ஆசிரியருக்கான தமிழக அரசின் விருதை கே.பாக்யராஜ் வென்றார். ஹிந்தியில் 'அந்தாஜ்' என்ற பெயரில் அனில் கபூர் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !