25வது திருமணநாளை கொண்டாடிய கிச்சா சுதீப் - பிரியா தம்பதி
ADDED : 3 hours ago
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராகவும் பாலிவுட் வரை அறியப்பட்ட நடிகராகவும் வலம் வருபவர் கிச்சா சுதீப். கடந்த 2001ல் இவருக்கும் பிரியா என்பவருக்கும் காதல் மலர்ந்து, 2001 அக்டோபர் 18 திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் தங்களது திருமண வாழ்க்கை 25 வருடங்களை நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் விதமாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மாலை மாற்றி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
இதில் சுவாரசியம் என்னவென்றால் கடந்த 2015ம் ஆண்டு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர் பின்னர் 2017ம் ஆண்டு தங்களது முடிவை மாற்றிக் கொண்டு விவாகரத்து வழக்கை திரும்ப பெற்று, தற்போது வரை மீண்டும் மனம் ஒத்த தம்பதியராக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.